Home இந்தியா கன்னியாகுமரி இடைத் தேர்தல் : காங்கிரசின் விஜய் வசந்த் 136 ஆயிரம் வாக்குகளில் முன்னிலை

கன்னியாகுமரி இடைத் தேர்தல் : காங்கிரசின் விஜய் வசந்த் 136 ஆயிரம் வாக்குகளில் முன்னிலை

559
0
SHARE
Ad

கன்னியாகுமரி : தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகளும் இன்று வெளியிடப்பட்டன.

காங்கிரஸ் சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட விஜய் வசந்த் 559,717 வாக்குகள் பெற்று முன்னணி வகிக்கிறார். அங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட பொன்.இராதாகிருஷ்ணன் 423,677 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

விஜய் வசந்த் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து காலமான வசந்தகுமாரின் புதல்வராவார். இவர் சென்னை-28 படத்திலும் வேறு சில படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது காங்கிரசின் மாநிலச் செயலாளராக செயலாற்றி வருகிறார்.

#TamilSchoolmychoice

தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று வசந்த் அண்ட் கோ. மறைந்த வசந்த குமார் சாதாரண நிலையில் இருந்து தொடங்கி பின்னர் மின்சாரப் பொருட்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தைத் தொடங்கி பெரும் கோடீஸ்வரராக உயர்ந்தார்.

வசந்தகுமார் மற்றொரு காங்கிரஸ் பிரமுகரான குமரி அனந்தனின் இளைய சகோதரருமாவார்.