Home இந்தியா தமிழ்நாடு தேர்தல்: உதயநிதி, துரைமுருகன், எடப்பாடி முன்னிலை

தமிழ்நாடு தேர்தல்: உதயநிதி, துரைமுருகன், எடப்பாடி முன்னிலை

462
0
SHARE
Ad

சென்னை: திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னனியில் இருக்கும் நிலையில், சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், 66,302 வாக்குகள் பெற்று முன்னனியில் உள்ளார்.

49,240 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் கஸ்ஸாலி, 17,062 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

முன்னதாக, பின்னடைவைச் சந்தித்த காட்பாடி வேட்பாளர் துரைமுருகனும் தற்போது முன்னணியில் உள்ளார். அவர் 63,786 வாக்குகள் பெற்று, 3,062 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

#TamilSchoolmychoice

60,000- க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில், எடப்பாடி தொகுதியில் கே.பழனிச்சாமி முன்னிலையில் உள்ளார்.