Home Featured நாடு அல் ஜசீரா செய்தியாளரை அரசாங்கம் நாடு கடத்தியது ஏன்? – கிட் சியாங் கேள்வி

அல் ஜசீரா செய்தியாளரை அரசாங்கம் நாடு கடத்தியது ஏன்? – கிட் சியாங் கேள்வி

687
0
SHARE
Ad

altantuyaகோலாலம்பூர் – அல்தான்துயா ஷாரிபு மரணத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால், பின் எதற்காக அக்கொலை வழக்கை விசாரணை செய்து வந்த அல் ஜசீரா செய்தியாளரை அரசாங்கம் நாடு கடத்தியது? என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று காலை அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் நடப்பு விவகாரங்கள் நிகழ்ச்சியான ‘101 ஈஸ்ட்’-ல் ‘மலேசியாவில் கொலை’ என்ற தலைப்பில் அல்தான்துயா மரணம் குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது.

அதை மேற்கோள் காட்டிய லிம் கிட் சியாங், அதில் இக்கொலை சம்பவத்தை விசாரணை செய்து வந்த தங்களது செய்தியாளர் மேரி ஆன் ஜோலியை மலேசிய  அரசாங்கம் நாடு கடத்தியதாகக் அல் ஜசீரா குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார். 

#TamilSchoolmychoice

அல்தான்துயா ஷாரிபுவை பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு தெரியாது, நஜிப் அவரை சந்தித்ததும் கிடையாது, அவருடன் எந்த தொடர்பும் கிடையாது மற்றும் அவரின் இறப்பில் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அல் ஜசீரா யூடியூப்பில் வெளியிட்டுள்ள அந்தக் காணொளி:-