Home Featured கலையுலகம் சரத்குமார்- ராதிகா மகள் ரேயான், கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை மணக்கிறார்!

சரத்குமார்- ராதிகா மகள் ரேயான், கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை மணக்கிறார்!

552
0
SHARE
Ad

TamilDailyNews_1983715295792சென்னை – நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் – நடிகையும் ராடான் தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனருமான ராதிகா தம்பதியின் மகள் ரேயானுக்கும், இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

இவர்களின் நிச்சயதார்த்தம் வரும் 23-ஆம் தேதி காலை 10 மணிக்குச் சென்னையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ரேயான், தற்போது ராடான் தொலைக்காட்சி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

பெங்களூருவைச் சேர்ந்த அபிமன்யு மிதுன்  இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளராகவும், ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.