Home Featured நாடு 1எம்டிபி விவகாரத்தில் அரச விசாரணை தேவை: வழக்கறிஞர் மன்றம் கோரிக்கை!

1எம்டிபி விவகாரத்தில் அரச விசாரணை தேவை: வழக்கறிஞர் மன்றம் கோரிக்கை!

818
0
SHARE
Ad

1MDBகோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரம் மற்றும் பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை செலுத்தப்பட்டது தொடர்பில் அரச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

நேற்று நடைபெற்ற வழக்கறிஞர் மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் 1040 வழக்கறிஞர்கள் திரண்டு வந்ததாகக்  குறிப்பிட்ட அம்மன்றத்தின் தலைவர் ஸ்டீவன் திரு, 1எம்டிபி மற்றும் 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொடர்பான விசாரணைக்கு இடையூறு செய்யும் எவர் மீதும் வழக்கு தொடர மன்றத்துக்கு வழக்கறிஞர்கள் ஆதரவு அளித்திருப்பதாகக் கூறினார்.

“பிரதமர் நஜிப்பின் நலன் கருதியே இந்த விவகாரங்கள் தொடர்பிலான விசாரணைக்கு உத்தரவிடக் கோருகிறோம். அந்த விசாரணை இடையூறுகளின்றி நடைபெற வேண்டும். அரச விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அரசாங்கத்துக்கு வழக்கறிஞர் மன்றம் கடிதம் எழுதும்.”

#TamilSchoolmychoice

“இந்த விவகாரங்களில் நிலவக்கூடிய இடையூறுகளை வழக்கறிஞர் மன்றம் கண்டிக்கிறது. அரசங்காத் தலைமை வழக்கறிஞர்  (அட்டர்னி ஜெனரல்)  கனி பட்டேல்பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு வழக்கறிஞர் மன்றம் கண்டனம் தெரிவிக்கிறது,” என்று ஸ்டீவன் திரு மேலும் தெரிவித்துள்ளார்.