Home Featured நாடு பங்சாரில் வைத்து கெவின் மொராயிஸ் கடத்தப்பட்டுள்ளார்!

பங்சாரில் வைத்து கெவின் மொராயிஸ் கடத்தப்பட்டுள்ளார்!

685
0
SHARE
Ad

Kevin Moraisகோலாலம்பூர் – மாயமான அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் பங்சாரில் வைத்து கடத்தப்பட்டிருப்பது இரகசிய கேமரா மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

ஜாலான் தெலாவாய் என்ற இடத்தில் சிலரால் அவர் கடத்தப்பட்டிருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

“மொராயிசின் காரை மற்றொரு கார் தடுக்கிறது. பின்னர் அவர் காரில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டு கடத்தப்படுகிறார்” இவை இரகசிய கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் என காலிட் கூறியதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதுவரை அவரை கடத்தி வைத்தவர்களிடமிருந்து எந்த ஒரு கோரிக்கையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.