Home உலகம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் ஜெர்மனி மேயர் தேர்தலில் வெற்றி!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் ஜெர்மனி மேயர் தேர்தலில் வெற்றி!

572
0
SHARE
Ad

ashok-sridharanபான் – ஜெர்மனியின் பான் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் வெற்றி பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், பான் நகர மேயராக வெற்றி பெற்று இருப்பது இதுவே முதல் முறை.

இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், 21 வருடங்களாக எதிர்கட்சியான சமூக ஜனநாயக கட்சியின் கோட்டையாக பான் நகர் இருந்து வந்தது. இந்நிலையில், அசோக் ஸ்ரீதரன் தனது மகத்தான வெற்றியின் மூலம் தான் சார்ந்து இருக்கும் கட்சியான கிறிஸ்டியன் ஜனநாயக ஒன்றியத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

49 வயதான அசோக் ஸ்ரீதரனின் தந்தை ஒரு இந்தியர். தாய் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்.  தற்போது, கோனிங்ஸ்வின்டர் நகரின் துணை மேயராகவும், கருவூலத் துறைத் தலைவராகவும் இருக்கும் அசோக் ஸ்ரீதரன் எதிர்வரும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி, பான் நகர மேயராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.