இது தொடர்பாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஏர் இந்தியா நிறுவனம், சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் ஆணைக்கு இணங்க கடந்த வருடம், தங்கள் நிறுவனத்தில் அதிக உடல் பருமனாக இருந்த சுமார் 600 ஊழியர்களை அழைத்து, விரைவில் சராசரி எடைக்கு மாறும்படி உத்தரவிட்டது. இதற்காக, கடைசி வாய்ப்பாக ஒருவருட கால அளவும் கொடுத்தது.”
இது தொடர்பாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “600 பேரில் 125 பேர் உடல் நிறை குறியீட்டெண் (BMI) அளவிற்குள் தங்களது உடல் எடையை பராமரிக்கத் தவறி விட்டனர். அதனால் அவர்களை வெளியேற்றுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
சிவில் விமான போக்குவரத்து ஆணையம், ஆண்களின் உடல் நிறை குறியீட்டெண் 18-25-ம், பெண்களின் உடல் நிறை குறியீட்டெண் 18-22-ம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.