Home Featured தமிழ் நாடு கோவையில் மதிமுக மாநாடு: மலேசியா பினாங்கு துணை முதல்வர் ராமசாமி சிறப்புரை!

கோவையில் மதிமுக மாநாடு: மலேசியா பினாங்கு துணை முதல்வர் ராமசாமி சிறப்புரை!

743
0
SHARE
Ad

v3கோவை – திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மதிமுக மாநாடு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதிமுக சார்பில் நடைபெறும்அண்ணாவின் 107-ஆவது பிறந்த நாள் மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இம்மாநாட்டிற்குத் திருப்பூர் மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநாட்டுத் திடல் முன்பாக உள்ள கட்சிக் கொடியை கோவை மாவட்டச் செயலாளர் மோகன்குமார் ஏற்றி வைத்தார்.

#TamilSchoolmychoice

இம்மாநாட்டிற்காகச் சுமார் 150 ஏக்கரில்  பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.இதில் சிறப்பு விருந்தினர்களாக மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் ராமசாமிதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் ந்தொடக்கமாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி இருவரும் மதிமுக தொண்டர் அணியினர் நடத்தியஅணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து திராவிட இயக்க நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமியும், மது ஒழிப்பு வைகோ பிரசாரப் படக் கண்காட்சியைப் பொருளாளர் மாசிலாமணியும் துவக்கி வைத்தனர்.

வைகோ பொதுவாழ்வு வண்ணப்படத் தொகுப்பு மலரை மலேசிய துணை முதல்வர் ராமசாமி  வெளியிட்டார். இதை, கவிஞர் காசி ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.

மாநாட்டில், பெரியார் படத்தைத் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, அண்ணா படத்தை கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மாநாட்டின் நிறைவில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி சிறப்புரையாற்றுகிறார்.

அதைத் தொடர்ந்து மாநாட்டுப் பிரகடன உரையை வைகோ இன்றிரவு நிகழ்த்தவிருக்கிறார்.