சென்னை – எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகி, வசூலில் உலக சாதனை படைத்த திரைப்படம் பாகுபலி.
இத்திரைப்படம், சீனாவின் 5000 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீர்கான் நடித்த ‘பிகே‘ திரைப்படத்தை சீனாவில் வெளியிட்ட அனுபவம் வாய்ந்த இ ஸ்டார்ஸ் நிறுவனம் தான் பாகுபலி படத்தையும் சீனாவில் வெளியிட உள்ளது.
நவம்பர் மாதத்தில் இப்படத்தை அங்கே வெளிடத் திட்டமிட்டுள்ளனர். சீனாவில் வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் 20 நிமிடக் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன.
தென் இந்தியத் திரைப்படம் ஒன்று, சீனாவில் வெளியாவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.