Home Featured நாடு எண்ணெய் பீப்பாய்க்குள் கெவின் மொராய்ஸ் சடலமா?

எண்ணெய் பீப்பாய்க்குள் கெவின் மொராய்ஸ் சடலமா?

717
0
SHARE
Ad

Kevin Moraisசுபாங் – கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் பற்றிய புலனாய்வில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், கான்கிரிட் எனப்படும் உறைந்த சிமெண்டில் உள்ள ஒரு சடலம் எண்ணெய் பீப்பாய்க்குள் இருப்பதை சுபாங் ஜெயாவில் இன்று காலை கண்டு பிடித்துள்ளனர்.

யுஎஸ்ஜே 1 – பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் பின்னால் அந்த எண்ணெய் பீப்பாய் கண்டெடுக்கப்பட்டது.

சடலம் யாருடையது என்பதை காவல் துறை இன்னும் நிரூபிக்கவில்லை. இன்று காலை 6 மணி முதல் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தைச் சுற்றி காவல் துறையினர் துப்பு துலக்கி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அந்த எண்ணெய் பீப்பாயைத் திறந்து சடலத்தை வெளியே எடுக்கும் முயற்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளது.