Home Featured நாடு சிவப்புப் பேரணி: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்! (தொகுப்பு 1)

சிவப்புப் பேரணி: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்! (தொகுப்பு 1)

534
0
SHARE
Ad

Ahmad-maslan-red shirt rally

  • அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் மோட்டார் சைக்கிளில் சிவப்புப் பேரணியில் இன்று காலை கலந்து கொண்டார் (மேலே மலேசியாகினி இணையத் தளம் வெளியிட்ட படம்)
  • அம்னோ தலைமையகம் இருக்கும் புத்ரா உலக வாணி மையத்திலிருந்து காலை 10.45 மணியளவில் சுமார் 3,000 பேர் பாடாங் மெர்போக் நோக்கிப் பேரணி.
  • “இனவாத ஜசெகவுக்குக் கண்டனம்” – என்ற பதாகைகளை புத்ரா உலக வாணிப மையத்திலிருந்து புறப்பட்ட கூட்டத்தில் எரிப்பு.
  • வட மாநிலங்களில் இருந்து 300 பேருந்துகளில் சிவப்பு பேரணியில் கலந்து கொள்பவர்கள் வந்திருப்பதாக பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • தேசியப் பள்ளிவாசலில் இருந்து புறப்பட்ட பேரணியினரிடையில் “மலாய் இனத்தையும், மதத்தையும் எதிர்க்காதீர்கள்” என்ற வாசகம் அடங்கிய பதாகைகள்