Home Featured நாடு பழனிவேல் தரப்பினரின் கூட்டரசு நீதிமன்ற மேல் முறையீட்டு விசாரணை தேதி நாளை நிர்ணயிக்கப்படலாம்!

பழனிவேல் தரப்பினரின் கூட்டரசு நீதிமன்ற மேல் முறையீட்டு விசாரணை தேதி நாளை நிர்ணயிக்கப்படலாம்!

672
0
SHARE
Ad

Palanivel-new-Featureகோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் கூட்டரசு நீதிமன்றத்திற்கு செய்துள்ள மேல் முறையீட்டின் விசாரணைத் தேதி நாளை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வழக்குகளின் தாமதத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக மலேசிய நீதிமன்றங்களில் ஒரு நடைமுறை பின்பற்றப்படுகின்றது. நீதிமன்ற விசாரணை முழுமையாகத் தொடங்குவதற்கு முன்னால் இரண்டு தரப்பினரையும் ஒரு நாளில் அழைத்து, அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதா, வழக்கறிஞர்களுக்குள் எல்லா ஆவணங்களும் முறையாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டுவிட்டதா, வழக்கில் இரண்டு தரப்புக்கும் இடையில் சமாதானம் ஏதும் ஆகியுள்ளதா, இரண்டு தரப்பும் வழக்கை நடத்த தயார் நிலையில் உள்ளனரா என்பதையெல்லாம் நீதிமன்றம் முதலில் நிர்ணயம் செய்யும். அதன் பின்னரே விசாரணைக்கான தேதியை நீதிமன்றம் முடிவு செய்யும்.

இந்த நடைமுறையை கேஸ் மேனேஜ்மெண்ட் – case management – அதாவது “வழக்கு நிர்வாகமுறை” என்று கூறுவார்கள்.

#TamilSchoolmychoice

அந்த வகையில் பழனிவேல் தரப்பினரின் மேல்முறையீட்டு வழக்கின் ‘வழக்கு நிர்வாக முறை’ நாளை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தரப்புகளும் (பழனிவேல் தரப்பு மற்றும் சங்கப் பதிவகத் தரப்பு) தயார் என்றால் கூட்டரசு நீதிமன்றம் நாளை விசாரணக்கான தேதியை முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.