Home கலை உலகம் ரஜினிகாந்தின் ‘கபாலி’ படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது!

ரஜினிகாந்தின் ‘கபாலி’ படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது!

776
0
SHARE
Ad

201509171047262535_Kabali-first-look-Rajinikanths-salt-and-pepper-gangster_SECVPFசென்னை – ரஜினிகாந்தின் கபாலி படப்பிடிப்பு இன்று சென்னையில் விநாயகர்  வழிபாட்டுடன் தொடங்கியது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் கபாலி படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, விநாயகர் சதுர்த்தியான இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்காகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் உள்ள படப்பிடிப்புத் தளங்களில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இன்று சென்னையில் உள்ள ஓர் அரங்கில் படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் ரஜினி சால்ட் அண்ட் பெப்பர் சிகை அலங்காரத்தில் கோட்-சூட் அணிந்து நடந்து வந்த காட்சி படமாக்கப்பட்டது. முதல் ‘ஷாட்’ முடிந்ததும் படப்பிடிப்புக் குழுவினர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

சென்னையில் இன்று முதல் தொடர்ந்து 20 நாட்களுக்குப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. முதலில் ரஜினி தொடர்பான காட்சிகளும், பின்னர் ராதிகா ஆப்தே மற்றும் நடிகர், நடிகைகள் பங்கேற்கும் காட்சிகளும் படமாக்கப்படுகின்றன.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிற்குப் படக் குழுவினர் மலேசியா செல்லவிருக்கிறார்கள். மலேசியாவில் கபாலி படப்பிடிப்பு எங்கு நடைபெற உள்ளது என்கிற விசயம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி விடக்கூடாது என்பதற்காகப் படப்பிடிப்புக் குழுவினர் கைபேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.