Home Featured தமிழ் நாடு வைரமுத்துவின் ‘குமுதம்’ சிறுகதைகளின் தொகுப்பு நூல் அக்டோபர் 10இல் வெளியீடு!

வைரமுத்துவின் ‘குமுதம்’ சிறுகதைகளின் தொகுப்பு நூல் அக்டோபர் 10இல் வெளியீடு!

1051
0
SHARE
Ad

10-1425979188-vairamuthu6-600சென்னை – தமிழ் இலக்கிய உலகம் இதுவரை காணாத புதுமையாக, முதன் முறையாக குமுதம் வார இதழில், ஒவ்வொரு வாரமும் ஒரு சிறுகதை என்ற முறையில் சிறுகதைகளை எழுதிக் குவித்து வருகின்றார் கவிஞர் வைரமுத்து.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அவர் சிறுகதை என்ற இலக்கிய வடிவத்திற்குள் நுழைவது இதுதான் முதல் முறையாகும்.

தமிழகத்தின் வார இதழ்களில் வழக்கமாக எழுத்தாளர்கள் வாரந்தோறும் கட்டுரைத் தொடர்களையோ தொடர் நாவல்களையோ எழுதுவதுதான் வழக்கம். அவ்வப்போது சிறுகதைகள் எழுதுவார்கள்.

#TamilSchoolmychoice

ஆனால், வைரமுத்துவோ, எல்லா நடைமுறைகளையும் உடைத்தெறியும் வண்ணம், வாரம் ஒரு சிறுகதையாக தொடர்ச்சியாக குமுதத்தில் எழுதி வருகின்றார். கடந்த 14.9.2015 தேதியிட்ட குமுதம் இதழோடு இதுவரை 36 சிறுகதைகளை எழுதி முடித்துவிட்டு, தொடர்ந்து எழுதியும் வருகின்றார்.

இந்த சிறுகதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு, எதிர்வரும் அக்டோபர் 10ஆம் தேதி சென்னையில் நடைபெறுகின்றது.

Vairamuthu -short stories-bannerஉலகமெங்கிலும் உள்ள தமிழ் வாசகர்களிடையே பிரபலமடைந்திருக்கும் இந்த சிறுகதைகளின் தொகுப்பு நூல் வாங்குவதற்கு முன்பதிவுகள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த நடைமுறையும் தமிழ் இலக்கிய உலகுக்கு புதுமையாகும்.

காரணம், வழக்கமாக தமிழ் நூல்களை அதிகமாக விற்பனை செய்ய முடியவில்லை என்ற புலம்பல்கள்தான் அதிகமாக எழுத்தாளர்களிடையே கேட்கும். ஆனால், வைரமுத்துவின் இந்த சிறுகதைத் தொகுப்பு நூல் விற்றுத் தீர்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், அனைவரும் நூல்களைப் பெறும் வண்ணம் முன்பதிவுகள் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது.

388 பக்கங்களைக் கொண்ட நூலில் விலை 300 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து முன் பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.

மின்னஞ்சல், அஞ்சல், தொலைபெசி ஆகிய தொடர்புகளின் மூலம் இந்த நூலை முன்பதிவு செய்யலாம்:

மேல் விவரங்களுக்கும் தொடர்புக்கும்:

சூர்யா இலக்கியம்,

தொலைபேசி: +91-44-24914747

-செல்லியல் தொகுப்பு