Home இந்தியா சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டும் பணி அக்டோபர் 1-ல் தொடக்கம்!

சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டும் பணி அக்டோபர் 1-ல் தொடக்கம்!

750
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_52678644658சென்னை – நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டும் பணி வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி, இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் வைக்கப்படுள்ள சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்திற்கு மிகுந்த இடைஞ்சலாக இருப்பதாகவும் அதை அகற்ற வேண்டும் எனக் கோரி நாகராஜன். எனபவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்திருந்தார்.

தமிழக அரசு அவரது கோரிக்கையை ஏற்றுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கடந்த 2014-ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆகையால் அவர் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத் துறைச் செயலர் ராஜீவ் ரஞ்சனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தார்.

#TamilSchoolmychoice

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு கடந்த 1-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், அடையாறில் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட இருப்பதாகவும் மணிமண்டபம் கட்டிய பின்னர் இங்கிருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்டு அங்கே நிறுவப்படும்‘ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்” என்றார்.

அதற்கு நீதிபதி, “ஒரு மணிமண்டபம் கட்ட இரண்டு ஆண்டா?அதுவரை போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் சிவாஜி சிலையை அகற்ற மாட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு வழக்கறிஞர், அரசின் கருத்தைக் கேட்டு விளக்கம் தருவதாகச் சொன்னார். இதையடுத்து இந்த வழக்கை 4 வாரத்திற்குத் தள்ளி வைத்தனர் நீதிபதிகள்.