Home இந்தியா பாட்டாளி மக்கள் கட்சியின் வரைவு தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாட்டாளி மக்கள் கட்சியின் வரைவு தேர்தல் அறிக்கை வெளியீடு!

945
0
SHARE
Ad

pamaசென்னை – பாமக சார்பில் வரைவு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் வெற்றி பெறத் தேவையான பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டன.

ம.தி.மு.க. தலைமையில் 5 கட்சிகள் கொண்ட மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் உருவாகியுள்ளது. அதன் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதைத் தேர்தல் சமயத்தில் அறிவிக்க உள்ளதாக வைகோ கூறியுள்ளார்.

பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாசை ஏற்கனவே அறிவித்துவிட்டதோடு, தற்போது தனது வரைவு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.மேலும், அன்புமணி ராமதாசை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் மட்டுமே பாஜக-வுடன் கூட்டணி என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பாமக-வின் வரைவு தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் யாதெனில்:

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி ஆகியவை மாவட்டங்கள் தோறும் தொடங்கப்படும்.

சென்னையில் அனைத்துப் பேருந்துகளிலும் பொதுமக்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயது வரை தினமும் ஒரு லிட்டர் பால் இலவசம்.

வேளாண்மைக்குத் தேவையான உரம், பூச்சிமருந்து, விதைகள், மின்சார மோட்டார் இலவசமாக வழங்கப்படும்.

தமிழகத்தில் பாயும் நதிகள் இணைக்கப்படும்.

ஊழலை ஒழிக்க ‘லோக் ஆயுக்தா’ கொண்டு வரப்படும்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டுத் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

தென் மாவட்டங்களில் அதிகத் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.

அனைத்து உணவுப் பொருட்களும் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும்.

மின் கட்டணம் குறைக்கப்படும்.

நெல்லை, கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை. கொண்டு வரப்படும்.

60 வயதான அனைவருக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

கிரானைட் மற்றும் தாதுமணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்படும்.

சென்னையில் கூவம், அடையாறு நீர்நிலைகள் தூய்மைப்படுத்தி அழகாக்கப்படும்.

வீடு கட்டுவதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் மானிய விலையில் வழங்கப்படும்.

-இச்சிறப்பு அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.