Home இந்தியா பாலியல் புகார் எதிரொலி : சவுதி அரேபியத் தூதரக அதிகாரி நாடு கடத்தல்!

பாலியல் புகார் எதிரொலி : சவுதி அரேபியத் தூதரக அதிகாரி நாடு கடத்தல்!

547
0
SHARE
Ad

arபுதுடில்லி – பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டில் சிக்கிய சவுதி அரேபிய தூதரக அதிகாரி மஜீத் ஹாசன் அஷூர் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து அவர் நேற்றிரவு சவுதி அரேபியாவிற்குத் திரும்பிச் சென்று விட்டதாகவும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வாரூப் தெரிவித்துள்ளார்.

டில்லியில் உள்ள சவுதி அரேபியத் தூதரக அதிகாரியின் வீட்டிற்கு வேலைக்காக அழைத்து வரப்பட்ட இரண்டு நேபாளப் பெண்களைச் சவுதி அரேபியத் தூதரக அதிகாரி அவர்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து வீட்டில் அடைத்து வைத்துக் கடந்த 4 மாதங்களாகப் பாலியல் சித்ரவதை செய்து வந்ததாகத் தொண்டு நிறுவனத்தால் மீட்கப்பட்ட அந்தப் பெண்கள் புகார் செய்தனர்.

அப்புகாரையடுத்து அவர் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மற்றும் மகள் மீதும் டில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.ஆனால், அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை.

#TamilSchoolmychoice

இத்தகவல் கிடைத்த சவுதி அரசு, அந்நாட்டுத் தூதரக அதிகாரி மீதான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்தது.மேலும்,தூதரக அதிகாரியும் அவரது குடும்பத்தாரும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து அடாவடித்தனம் செய்து வந்தனர்.

saudiஅவர்களைக் கைது செய்யக் கோரி மகளிர் அமைப்புகள் சவுதி அரேபியத் தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக பதிலும் அளிக்காத நிலையில், அந்த அதிகாரி திரும்பப் பெறப்பட்டு, சவுதிக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.