Home Featured உலகம் பாகிஸ்தான் விமானப் படைத் தளத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல்! 3 பேர் பலி!

பாகிஸ்தான் விமானப் படைத் தளத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல்! 3 பேர் பலி!

493
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512பெஷாவார் – பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் உள்ள பாகிஸ்தான் இராணுவ விமானப் படைத் தளத்தின் மீது இன்று காலை திடீரென  பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

7 முதல் 10 பேர் கொண்ட பயங்கரவாதக் குழுவினர் திடீரென இன்று காலை இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டை கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், இன்னும் சண்டை தொடர்ந்து கொண்டிருப்பதாக பாகிஸ்தான் இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

காவல் துறையினரும் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி வளைத்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(மேலும் செய்திகள் தொடரும்)