Home Featured தமிழ் நாடு வைகோவை மீட்பாரா ஜெயலலிதா?

வைகோவை மீட்பாரா ஜெயலலிதா?

476
0
SHARE
Ad

VAIKO_JAYA_சென்னை – “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை” என்பது அனைவரும் காலம் காலமாகக் கூறிவரும் பழமொழி. நட்பும், பகையும் மாறி மாறி வந்தாலும், அரசியலில் துரோகத்திற்கான இடம் மட்டும் என்றும் மாறாததாகவே உள்ளது. அப்படி ஒரு துரோக வலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிக்கி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மதிமுக கட்சியினருக்கு இடையே நிலவும் பூசல்கள் குறித்து நாம் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம். அந்த பூசல்களின் பின்னணியில் யார்? இருக்கிறார்கள் என்று தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனினும், யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், திருப்பூரில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய வைகோவே, நேரடியாக அதனைக் கொட்டித் தீர்த்துள்ளார்.

karunanidhi-vaikoமதிமுகவில் இருந்து ஒவ்வொருவராக திமுக பக்கம் சேர்ந்து கொண்டிருக்கும் நிலையில், வைகோவிற்கும், மதிமுகவிற்கும் தற்போதய நிலையில், பலம் சேர்க்க முடியும் என்றால் அது ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். தற்போது வைகோவிற்கு அந்த எண்ணமே மேலோங்கி இருப்பதாகத் தெரியவருகிறது.

#TamilSchoolmychoice

இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வை வீழ்த்த திமுக-வுடன் நாம் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்றும் அதனை தக்க நேரத்தில் அறிவிப்பேன் என்றும் வைகோ கூறியதாகவும், ஆனால் கடந்த 7-ம் தேதி நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், மக்கள் நலன் காக்கும் கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம். நாம் தனித்துப் போட்டியிடுவதால், அதிமுக வந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? அதிமுக வெற்றி பெறட்டும். திமுக-வை விட அதிமுக மேல்” என்றும் வைகோ கூறியதாக சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட மதிமுக முக்கிய நிர்வாகி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், வைகோ கடந்த சில நாட்களாகவே திமுகவின் செயல்பாடுகளினால் கடும் கோபVaiko-meets-Stalinமடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதற்கு மிக முக்கியக் காரணமாகக் கூறப்படுவது, அருள்நிதியின் திருமண நிகழ்ச்சி தான். ஸ்டாலின் நேரடியாக வந்து கூப்பிட்டதால் தான், அந்த நிகழ்ச்சியில் வைகோ கலந்து கொண்டார். எனினும், ஸ்டாலின் அந்த திருமணத்தில் வைகோவை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், அதன் பிறகு நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளின் போது, “வைகோவுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? எத்தனை சீட்டுகள் (தொகுதிகள்) கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்” என ஸ்டாலின் கூறியது, வைகோவை கடும் கோபத்திற்குள்ளாக்கி உள்ளது. இந்த சூழலில் தான், வைகோ, திமுகவே வேண்டாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்.

இனி அடுத்தகட்ட நடவடிக்கையாக 2016 தேர்தலை, வைகோ, மக்கள் நலன் காக்கும் கூட்டணியுடன் சேர்ந்து சந்தித்தால், அவரது தன்மானம் காப்பாற்றப்பட்டாலும், கட்சி காப்பாற்றப்படுமா? என்ற ஐயம் நிலவுகிறது. இதற்கிடையே, கடந்த சில நாட்கள் வரை, மக்கள் நலன் காக்கும் கூட்டணி தான் என்று கூறி வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நேற்றைய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, தேர்தல் வரும் சமயத்தில் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என்று புதிய குழப்பத்தைக் கிளப்பி உள்ளார்.

ஒருவேளை தேர்தல் சமயத்தில் கூட்டணி என்ற பேச்சுக்கள் எழுந்தால், மக்கள் நலன் காக்கும் கூட்டணி, கண்டிப்பாக திமுக விட அதிமுக பக்கமே சாயும் என்பது வைகோவின் சமீபத்திய பேச்சுக்களில் இருந்து தெளிவாகிறது. அந்த கூட்டணியில், வைகோவைத் தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்ததில்லை.

vaiko12அப்படி இருக்கையில், வைகோவே அதிமுக கூட்டணிக்கு சம்மதித்தால், மக்கள் நலன் காக்கும் கூட்டணி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. ஜெயலலிதாவும், அதனை ஏற்க தயாராக இருப்பார் என்றே தோன்றுகிறது. அதனால், அடுத்த சில வாரங்களுக்குள் போயஸ் தோட்டத்தில் மக்கள் நலன் காக்கும் கூட்டணியினரின் தலைகள் தெரிய வாய்ப்புள்ளது.

யூகங்கள் அனைத்தும் சரியாக நடந்தால், அதிமுக, மக்கள் நலன் காக்கும் கூட்டணியினர் மற்றும் பாஜக ஒரு அணியிலும், திமுக, தேமுதிக மற்றும் காங்கிரஸ் ஒரு அணியிலும் இருந்து இந்த தேர்தலை சந்திக்க வாய்ப்பிருகிறது. அப்படி ஒருவேளை அமைந்தால், அது கண்டிப்பாக அதிமுகவிற்கே பலம் சேர்க்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், யூகங்களுக்கு அப்பாற்பட்டது தான் அரசியல். அங்கு எதுவேண்டுமானாலும் நிகழலாம்.

– சுரேஷ்