Home Featured நாடு ‘கெவின் மொராயிஸ் தலையில் தாக்கப்பட்டுள்ளார்’ – முதற்கட்டப் பரிசோதனை கூறுகிறது!

‘கெவின் மொராயிஸ் தலையில் தாக்கப்பட்டுள்ளார்’ – முதற்கட்டப் பரிசோதனை கூறுகிறது!

500
0
SHARE
Ad

Kevin Morais

கோலாலம்பூர் – அரசு தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிசின் சடலத்தின் மீது நடத்தப்பட்ட மரபணுப் பரிசோதனைகளின் முடிவுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் தேசிய தடவியல் பரிசோதனைப் பிரிவு தெரிவித்துள்ளதாக அவரது இளைய சகோதரர் டத்தோ ரிச்சர்டு மொராயிஸ் தெரிவித்துள்ளார்.

மரபணுப் பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னர் தான் இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் ரிச்சர்டு குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று ரிச்சர்டு மற்றும் கெவினின் மற்றொரு சகோதரரான டேவிட் ஆகியோரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டன.

இதனிடையே, மழுங்கிய ஆயுதம் கொண்டு பல முறை தலையில் அடிக்கப்பட்டதால் கெவின் மொராயிஸ் இறந்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சில முன்னணி இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், விரைவில் கெவின் மொராயிஸ் இறந்ததற்கான முழுமையான காரணம் பரிசோதனைகளின் மூலம் தெரியவரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.