Home இந்தியா அந்நிய முதலீடுகளை ஈர்க்க இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிங்கப்பூர் பயணம்!

அந்நிய முதலீடுகளை ஈர்க்க இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிங்கப்பூர் பயணம்!

555
0
SHARE
Ad

arun-jetly-1024x768புதுடில்லி – மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அந்நிய முதலீடுகளைக் கவரும் நோக்கில் சிங்கப்பூருக்கும், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்குக்கும் 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக அவர் நேற்றிரவு டில்லியில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்றடைந்தார்.அங்கு அவர் இன்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுாங்கை சந்திக்கும் ஜெட்லி, துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம், வெளியுறவுத்துறை அமைச்சர் கே.சண்முகம் ஆகியோரையும் சந்திக்கிறார்.

அதையடுத்துப் பல்வேறு ஆசிய நாடுகள் பங்கேற்கும் வருடாந்திர முதலீடு மாநாடாகிய சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

#TamilSchoolmychoice

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் ஹாங்காங் செல்கிறார். இந்தப் பயணத்தின் மூலம் இந்தியாவிற்குப் பெருமளவு முதலீடுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.