Home இந்தியா ரூ1935 கோடியில் கூவம் நதியைச் சுத்தப்படுத்தத் திட்டம்: ஜெயலலிதா அடிக்கல்!

ரூ1935 கோடியில் கூவம் நதியைச் சுத்தப்படுத்தத் திட்டம்: ஜெயலலிதா அடிக்கல்!

777
0
SHARE
Ad

p457_0சென்னை – சென்னையின் முக்கிய அடையாளமாகிய கூவம் நதியைச் சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.

இத்திட்டத்தை, ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ தமிழ்நாடுஅரசுடன் ஒருங்கிணைந்து மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தவுள்ளது.

முதற்கட்டமாக முதல் 3 ஆண்டுகளில் குறுகிய காலத் திட்டமாக 60 துணைத் திட்டங்களும்-

#TamilSchoolmychoice

இரண்டாம் கட்டமாக 4 முதல் 8 ஆண்டுகளில் 7 துணைத் திட்டங்களும்-

மூன்றாம் கட்டமாகச் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 1934 கோடியே 84 லட்சம் ரூபாய் ஆகும்.

ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச் சூழல் சீரமைப்புத் திட்டத்தின் முக்கிய நோக்கம், கழிவுநீர் கூவம் நதியில் கலப்பதைத் தடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்தல், திடக்கழிவு மேலாண்மை, நதியின் வெள்ளநீர்க் கொள்ளளவை மேம்படுத்திப் பராமரித்தல்-

கூவம் நதிக் கரையில் வாழும் மக்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுக்கான திட்டமிடல், பல்லுயிர்ப் பெருக்கத்தை மீட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்தி நகர்ப்புறங்களில் நதியின் கரையோரங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற் கொள்ளுதல் போன்றவையாகும்.