Home கலை உலகம் தன்னந்தனியாக அமர்ந்து நயன்தாராவின் மாயா படத்தைப் பார்ப்பவருக்கு 5 லட்சம் பரிசு!

தன்னந்தனியாக அமர்ந்து நயன்தாராவின் மாயா படத்தைப் பார்ப்பவருக்கு 5 லட்சம் பரிசு!

630
0
SHARE
Ad

maxresdefaultசென்னை –தன்னந்தனியாக அமர்ந்து நயன்தாரா நடித்துள்ள மாயா படத்தைத் தியேட்டரில் பார்ப்பவருக்கு ரூ 5 லட்சம் பரிசு என்று அந்தப் படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் சவால் விடுத்துள்ளார். அதிலும் அந்த 5 லட்சத்தை நயன்தாரா கையால் வாங்கலாமாம்!

கரும்பிலிருந்து தேன் வடியப் போகிறது. கசக்குமா என்ன? இது வெறும் சவால் இல்லையாம்; உண்மை தானாம்!

ஆனால், இந்தச் சவால் தமிழ் ரசிகர்களுக்கு இல்லையாம்; தெலுங்கு ரசிகர்களுக்குத்தானாம்!

#TamilSchoolmychoice

நயன்தாரா நடித்த ‘மாயா’ என்கிற பேய்ப் படம் நேற்று தமிழில் வெளியாகிப் பரபரப்பாய் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று தெலுங்கிலும் ‘மயூரி’ என்னும் தலைப்பில் வெளியாகிறது.

ஆனால், தமிழில் இருந்த அளவிற்குத் தெலுங்கில் போதிய விளபம்பரம் இல்லையாம். எனவே மயூரியைத் தனியாகத் தியேட்டரில் அமர்ந்து பார்க்கும் ரசிகருக்கு 5 லட்சம் பரிசு என அறிவித்துள்ளனர்.

தனியாக அமர்ந்து பார்த்தால் மட்டும் போதாதாம். நாடித்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டுமாம். எந்த ஒரு மாற்றமுமின்றி, பயப்படாமல் படம் முழுவதையும் பார்த்து முடிப்பவர்களுக்கு 5 லட்சம் வழங்கப்படும்.

இதில் சுவையான விசயம் இருக்கிறது. அது என்ன தெரியுமா?

மாயா படத்திலும் இது போன்ற ஒரு காட்சி உள்ளது. ஒரு பேய்ப் படத்தை தன்னந்தனியாக தியேட்டரில் பார்க்கும் தைரியசாலிக்கு ரூ 5 லட்சம் பரிசு என ஒரு இயக்குநர் அறிவிக்க, அநதச் சவாலை ஏற்றுப் படம் பார்க்கும் ஒரு தயாரிப்பாளர் செத்துப் போவார். ஆனால் நயன்தாரா தைரியமாகப் பார்த்து பரிசை வெல்வதாகக் காட்சி உள்ளது.

அதுபோல் உண்மையில் தனியாக இந்தப் படத்தைப் பார்த்துப் பரிசை வெல்லப் போகும் அதிர்ஷ்டசாலி- தைரியசாலி யார் என்று தெரியவில்லை.பொறுத்திருந்து பார்ப்போம்.