Home Featured நாடு ரேபிஸ் நோய்க்கு எதிராக பினாங்கு, கெடா, பெர்லிசில் அதிரடி நடவடிக்கை!

ரேபிஸ் நோய்க்கு எதிராக பினாங்கு, கெடா, பெர்லிசில் அதிரடி நடவடிக்கை!

702
0
SHARE
Ad

Rabid-dog-21ஜோர்ஜ்டவுன்- ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் பினாங்கு, கெடா, பெர்லிசில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை பொது இடங்களில் சுற்றித்திரிந்த 919 நாய்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ரேபிஸ் நோயை முற்றிலுமாகத் துடைத்தொழிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேபிஸ் பாதித்த மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் கால்நடை சேவை துறையைச் சேர்ந்த 200 பேர் ஈடுபட்டுள்ளனர். தற்போது முழுவீச்சில் இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

“பொது இடங்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்தவுடன், உடனடியாக அவற்றுக்கு ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தப்படுகிறது. பினாங்கு தீவில் உயிரிழந்த நாய்கள் எரியூட்டப்படும். பினாங்கில் (Mail Land) உயிரிழந்த நாய்கள் புதைக்கப்படும்” என கால்நடை சேவை துறையின் இயக்குநர் டாக்டர் சித்தி சல்மியா டாஹிர் தெரிவித்தார்.

நாய்கள் கொல்லப்படுவதற்கு பிராணிகள் நல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், பினாங்கு முதல் லிம் குவான் எங் உத்தரவின் பேரில், கடந்த வியாழக்கிழமை முதல் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரேபிஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையின் பேரில் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை கட்டாய நித்திரைக்கு ஆட்படுத்துவது நிற்காது என பினாங்கு மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.