Home Featured நாடு செப் 16 பேரணி: சட்டத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை – கைரி வலியுறுத்து!

செப் 16 பேரணி: சட்டத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை – கைரி வலியுறுத்து!

576
0
SHARE
Ad

Khairy Jamaludin 440 x 215கோலாலம்பூர்- சிவப்புச் சட்டை பேரணியின் போது சட்டத்தை மீறி செயல்பட்டவர்கள் அதற்குரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மீறாத வகையில், பேரணிகள் மற்றும் இதர நடவடிக்கைகளில் பங்கேற்க அம்னோ இளையர் பிரிவினருக்கு இதுவரையிலும் அனுமதி மறுக்கப்பட்டதே இல்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“அம்னோ இளைஞர் பிரிவைச் சேர்ந்த யாரேனும் சட்ட விதிமுறைகளை மீறியிருந்தால், அதற்குரிய ஆதாரங்களும் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுவே முக்கியம்” என்று தேசிய விளையாட்டு தின விற்பனையை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கைரி கூறினார்.

#TamilSchoolmychoice

சிவப்புச் சட்டை பேரணியின்போது பெட்டாலிங் சாலையில் ஏற்பட்ட சலசலப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “இந்த விவகாரம் குறித்த விசாரணையை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது” என்றார்.

கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற இந்தப் பேரணியின்போது அதில் பங்கேற்றவர்கள், காவல்துறை அரண்களையும் மீறிச் செல்ல முற்பட்டனர். இதையடுத்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து கூட்டம் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.