Home வணிகம்/தொழில் நுட்பம் 2014-ன் சிறந்த விமான நிறுவனமாக மலிண்டோ ஏர் தேர்வு!

2014-ன் சிறந்த விமான நிறுவனமாக மலிண்டோ ஏர் தேர்வு!

697
0
SHARE
Ad

malindo1கோலாலம்பூர் – கேஎல்ஐஏ (Kuala Lumpur International Airport) ஆண்டுதோறும் சிறந்த விமான நிறுவனத்திற்கு, விருது வழங்கி வருகிறது. கேஎல்ஐஏ-வின் 10-வது பதிப்பாக நேற்று இரவு நடந்து முடிந்தது இந்த நிகழ்ச்சியில், மலிண்டோ ஏர் நிறுவனம் 2014-ம் ஆண்டிற்கான சிறந்த விமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மலிண்டோவிற்கு விருது வழங்கி உள்ளது குறித்து அதன் தலைமை நிர்வாகி சந்திரன் ராமமூர்த்தி கூறுகையில், “எங்கள் துறையில் சிறந்து விளங்கியதற்கான மிக முக்கிய விருதாக நாங்கள் இதனை பார்க்கிறோம். வட்டாரப் பயணிகள் எங்களுக்கு வாக்களித்ததால் தான் இந்த விருது கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் எங்களின் சேவையை ஏற்றுக் கொண்டதாகவே நாங்கள் கருதுகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.