Home Featured கலையுலகம் ரஜினி ரசிகன் என்று கூறியதால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டாரா?

ரஜினி ரசிகன் என்று கூறியதால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டாரா?

699
0
SHARE
Ad

sivakarthikeyan attackமதுரை – தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை ஹன்சிகா உள்பட முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் கமலை அடுத்து வந்திறங்கிய சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தாக்க ஆரம்பித்தனர். பாதுகாவலர்கள் அவர்களிடமிருந்து மீட்டு அவரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், குஷ்பு நடத்தி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அண்மையில் கலந்து கொண்டு பேட்டியளித்த சிவா, தான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் என்று கூறியது தான் கமல் ரசிகர்கள் அவரைத் தாக்கக் காரணம் என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

‘காக்கிச் சட்டை’ என்று கமல் படத்தின் பெயரை மட்டும் உங்கள் படத்தின் தலைப்பாக வைத்துக் கொள்வீர்கள் ஆனால், நிகழ்ச்சிகளில் ரஜினி ரசிகர்கள் என்று கூறிக் கொள்வீர்கள் என்று ரசிகர்கள் ஆதங்கப்படுவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தக் தாக்குதல் குறித்து கமல் கூறுகையில், “மதுரையில் என்னுடைய ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியதாக கூறப்படுவது தவறு. நானும், சிவகார்த்திகேயனும் ஒன்றாகத் தான் விமானத்தில் வந்தோம். சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டதாக கூறப்படுவது தவறு”  என்று தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=80d_GVxREm8