கோலாலம்பூர் – வெகு விரைவில் ‘லோ யாட் 2’ திறக்கப்படவுள்ளதாக ஊரக மற்றும் வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சர் இஸ்மாயில் சாபெரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
நேற்று ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள மெனாரா மாரா என்ற கட்டிடத்தில் உள்ள மூன்றாவது தளத்தில் தயாராகி வரும் வர்த்தக மையத்தை இஸ்மாயில் பார்வையிட்டார். அதற்கு ‘Pusat Jualan IT@Busana, Menara Mara’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்மாயில் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலில், “இன்று மதியம், ஐடி மாரா மையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளையும், குறிப்பிட்ட நேரத்தில் அவை நிறைவு செய்யப்படுமா என்பதையும் தெரிந்து கொள்ள அங்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாரா ஐடி மையம், மெனாரா மாராவில் செயல்படும் என்றும், அதற்குத் தகுந்த சின்னத்தைத் தேர்ந்தெடுக்க தற்போது போட்டிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
“கவலைப்படாதீர்கள். ‘லோ யாட் 2’ என்ற பெயரைப் பயன்படுத்த மாடோம். புதிய சின்னத்தைத் தேர்ந்தெடுக்கும் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டபடி எதிர்வரும் நவம்பர் மாதம் ஐடி மையம் தயாராகிவிடும் என்றும், அதில் 30 கடைகள் அமைக்கப்படும் என்றும் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
“வர்த்தக மையம், தொலைத்தொடர்பு சாதனங்களின் விற்பனை மற்றும் கணினிகளைப் பழுது பார்ப்பது போன்றவற்றுடன் செயல்படும். இதனால் அதிகமான பூமிபுத்ரா தொழில் முனைவோர் உருவாவதோடு, அவர்கள் தங்களது தொழில்களை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்” என்றும் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
விற்பனைக் கடைகள் அமைக்க பெரும்பான்மை வாய்ப்புகள் பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்படும் என்றும், மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் விண்ணப்பித்தால், கருத்தில் கொள்வோம் என்றும்