இது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“இசைப்பிரியா கடந்த 2009–ம் ஆண்டு மே மாதம் 18–ம் தேதி வட்டுக்காவல் பாலத்தின் வடக்கே நந்திக்கடல் பகுதியில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஏராளமான காணொளிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன.”
“ஆரம்பத்தில் அவர், பிரபாகரனின் மகள் என இலங்கை இராணுவம் கருதி உள்ளது. அதன் பின்னர் தான் அவர் விடுதலைப் புலிகளின் ஊடகப் போராளி என தெரிய வந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்ட போது, அவர் போர்த்திக் கொள்வதற்கு மேலாடையை கொடுத்துள்ள இலங்கை இராணுவத்தினர், அதன் பிறகு அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, தலையில் சுட்டு படுகொலை செய்துள்ளனர்”
“மேலும், இலங்கை இராணுவம் திட்டமிட்டே அவரது சடலத்தில் இருந்த ஆடைகளை கலைந்துள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.