Home உலகம் ஐநா சபையில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இலங்கை அரசு அதிருப்தி!

ஐநா சபையில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இலங்கை அரசு அதிருப்தி!

533
0
SHARE
Ad

srilanka_meet_008ஜெனிவா – ஐநா மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் சில அம்சங்களுக்கு இலங்கை அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

இலங்கை இறுதிக்கட்டப் போர் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் நகல் பிரதி வரும் 24-ஆம் தேதி ஐநா பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது அதற்கு முன்னர் உறுப்பு நாடுகளின் கருத்துக்களைக் கேட்டறியும் கலந்துரையாடல் ஜெனீவாவில் இன்று ஆரம்பமானது.

இக்கூட்டத்தின் போது வட மகாண சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புலம்பெயர் சமூக அமைப்பினர்,  அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பினர் அமெரிக்காவின் தீர்மானத்திற்குக் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும், ஐநா மனித உரிமை அவைக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆர்யசிங்கா,அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள தீர்மானத்தின் சில வாசகங்கள், தங்கள் நாட்டு இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகக் கூறினார்.

குறிப்பாகப் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகள் விவகாரத்தில் அமெரிக்காவின் தீர்மானம் எதிர்விளைவுகளை உண்டாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.