Home Featured நாடு மத்தியாஸ் சாங் கைது இல்லை!

மத்தியாஸ் சாங் கைது இல்லை!

656
0
SHARE
Ad

Matthias Chang-lawyer for-khairuddinகோலாலம்பூர் – 1எம்டிபி ஊழல் குறித்து புகார் கூறியுள்ள டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹாசானின் வழக்கறிஞரும், துன் மகாதீரின் முன்னாள் அரசியல் செயலாளருமான மத்தியாஸ் சாங் நேற்று காலை 9.30 மணியளவில் டாங்  வாங்கி காவல் நிலையம் வந்து காவல் துறையினரிடம் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார்.

இருப்பினும், பரவலாக எதிர்பார்க்கப்பட்டதைப் போலவும், மத்தியாஸ் சாங்கே ஆரூடம் கூறியிருந்தபடியும், காவல் துறையினர் அவரைக் கைது செய்யவில்லை.

ஏறத்தாழ ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும், மீண்டும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவர் காவல் நிலையம் வந்து கைருடின் வழக்கு மீதான விசாரணையில் ஒத்துழைக்க வேண்டியிருக்கும் என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice