Home Featured இந்தியா அசாம் கோலோஹி ஆற்றில் படகு கவிழ்ந்து 30 பேர் வரை காணவில்லை!

அசாம் கோலோஹி ஆற்றில் படகு கவிழ்ந்து 30 பேர் வரை காணவில்லை!

511
0
SHARE
Ad

Assam river capsizeகௌஹாத்தி – இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாமில் உள்ள கோலோஹி ஆற்றுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை ஓர் ஆற்றுப் படகு கவிழ்ந்ததில் 30 பேர் வரை காணாமல் போயிருக்கின்றார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படகில் சுமார் 250 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும், தேடும் பணியில் தங்களின் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அந்தப் படகின் மோட்டார் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மீட்புப் படையினர் பணியில் ஈடுபட்டிருப்பதை மேலே உள்ள படத்தில் காணலாம்.