தனக்கு அந்த 7 லட்சம் வெள்ளி பற்றி எதுவும் தெரியாது என்றும், தான் அன்வாரை இரண்டு முறை மட்டுமே இதுவரை சந்தித்திருப்பதாகவும், முதல் முறை 1994 இல் அதிகாரப்பூர்வப் பணியில் இருந்தபோதும், இரண்டாவது என்னுடைய முதலாவது சத்தியப்பிரமாண வாக்குமூலம் முடிந்து அதன் பின் நடந்த செய்தியாளர் கூட்டத்திலும் சந்தித்ததாகத் தெரிவித்தார்.
மேலும் அவர், ” என் தாயின் மீது சத்தியம் செய்து சொல்கிறேன். எனக்கு அந்த 7 லட்சம் வெள்ளி பற்றி எதுவும் தெரியாது. என் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் அனைத்திலும் உண்மை இல்லை” என்று தெரிவித்தார்.