Home நாடு பாலா மனைவியின் வழக்கு: குற்றச்சாட்டுகளை மறுத்த நஜிப், ரோஸ்மா!

பாலா மனைவியின் வழக்கு: குற்றச்சாட்டுகளை மறுத்த நஜிப், ரோஸ்மா!

1327
0
SHARE
Ad

Bala-wifeகோலாலம்பூர் – மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி செந்தமிழ் செல்வி, தமக்கு எதிராகத் தொகுத்த வழக்கில், கூறப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் மறுத்திருக்கின்றனர்.

மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தனது கணவர் கொடுத்த சத்தியப் பிரமாணத்தைத் திரும்பப் பெற வைத்ததாக செந்தமிழ் செல்வி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது மற்றும் தங்களைக் களங்கப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்றும் நஜிப்பும், அவரது மனைவியும் வெளியிட்ட மறுப்பு அறிக்கையில் தெரிவித்திருப்பதாக மலேசியாகினி தெரிவித்திருக்கிறது.

 

#TamilSchoolmychoice