இது குறித்து வேள்பாரி இன்று புதன்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இச்சம்பவத்தில் காவல்துறை அவர்களின் கடமையைச் செய்யட்டும். இந்த விவகாரத்தில் தலையிட்டு, அந்த நபருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே தீர்வு காண நமக்கு அதிகாரம் கிடையாது. நாம் காவல்துறையோ, நீதிமன்றமோ அல்லது அரசாங்க வழக்கறிஞரோ கிடையாது”
“அவர் செய்தது தவறு தான் அதில் எந்த ஒரு சமரசமும் கிடையாது. அந்த நபர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று வேள்பாரி தெரிவித்திருக்கிறார்.
Comments