Home உலகம் நியூயார்க் தாக்குதலை நடத்தியவன் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவனா?

நியூயார்க் தாக்குதலை நடத்தியவன் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவனா?

1005
0
SHARE
Ad

Newyorkattacksuspectநியூயார்க் – நியூயார்க்கில் நேற்று செவ்வாய்க்கிழமை, பாதசாரிகள் மற்றும் சைக்கிளோட்டிகள் செல்லும் பாதையில் கனரக வாகனத்தை ஏற்றி, மர்ம நபர் நடத்திய தீவிரவாதத்தாக்குதலில் 8 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், அந்நபர் குறித்தத் தகவல்களை நியூயார்க் காவல்துறை வெளியிட மறுத்திருக்கிறது.

என்றாலும், ஊடங்களில் வெளியாகியிருக்கும் தகவலின் படி, 29 வயதான அந்நபரின் பெயர் சைபுலோ ஹபீபுலாஎவிக் சைபோவ் என்றும், தனது 7 வயதில் உஸ்பெகிஸ்தானில் இருந்து குடும்பதோடு அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவன் என்பதும் தெரியவந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

என்றாலும், அவன் அமெரிக்கப் பிரஜை இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது வயிற்றில் குண்டு துளைக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவனைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.