Home நாடு தகாத வார்த்தைகள் பேசிய மஇகா கிளைத் தலைவர் நீக்கம்: டாக்டர் சுப்ரா

தகாத வார்த்தைகள் பேசிய மஇகா கிளைத் தலைவர் நீக்கம்: டாக்டர் சுப்ரா

1104
0
SHARE
Ad

subra-drகோலாலம்பூர் – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் பத்திரிக்கை அறிக்கை:-

“கடந்த சில நாட்களாக வாட்ஸ்எப் மற்றும் சமூக வலைத்தளங்களில் நடராஜா என்ற நபர் தகாத முறையில் தொலைபேசியின் வழி உரையாடல்கள் வெளியாகியிருந்தன. அந்நபர் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஶ்ரீ சகாயா மஇகா கிளைத் தலைவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிக்கு அவர் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்ற அடிப்படையில் அவரை உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கும் முடிவை எடுத்துள்ளேன்.”

“இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து காவல் துறையின் முடிவுக்கு விட்டுவிடுகிறோம்.”

#TamilSchoolmychoice

டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்
மஇகா தேசிய தலைவர்
மலேசிய இந்தியன் காங்ரஸ்
01-11-2017