Home Featured நாடு ‘செல்லியல்’ மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது!

‘செல்லியல்’ மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது!

574
0
SHARE
Ad

Selliyal Logo 440 x 215கோலாலம்பூர் – தொழில்நுட்பப் பிரச்சனைகள் தற்போது களையப்பட்டு,  ‘செல்லியல்’ தகவல் ஊடகம், இணையத்தின் மூலமும், செல்பேசி குறுஞ்செயலிகளின் மூலமும் மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளது என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ‘புலி’ படத்தின் வெளியீடு தடைப்பட்டது, அந்தப் படம் குறித்த விமர்சனங்கள் போன்ற பரபரப்பான செய்திகளையும், மேலும் சில சூடான செய்திகளையும்  உடனுக்குடன் தெரிந்து கொள்ள அளவுக்கதிகமான இரசிகர்களும், வாசகர்களும் ஒரே நேரத்தில், இணையம் மற்றும் செல்பேசி வழி செல்லியல் செய்திகளைப் படிக்க ஆர்வம் காட்டியதன் காரணமாக, நமது உள்ளடக்கங்களை பதிவு செய்து சேமித்து வைக்கும் நிறுவனத்தின் (hosting service provider) சேவையகங்களின் கொள்ளிடங்களில் (server)இடப் பற்றாக்குறையும், அதன் காரணமாக, தொழில்நுட்பப் பிரச்சனைகளும் ஏற்பட்டு, செல்லியல் சேவைகள் பாதிக்கப்பட்டன என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவை சரி செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

எங்களின் சேவைகள் தடைப்பட்ட கால கட்டத்தில், எங்களைத் தொடர்பு கொண்டு, ஆர்வத்துடன், அக்கறையுடன் விசாரித்த அனைத்து வாசகர்களுக்கும், நல் உள்ளங்களுக்கும் இந்த வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.