Home கலை உலகம் புலிக்கு கபாலி பாராட்டு!

புலிக்கு கபாலி பாராட்டு!

500
0
SHARE
Ad

vijay-puli7591-compressorசென்னை – சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதி ஹாசன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் புலி படம், பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் நாளில் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை இந்த படம் சந்தித்தாலும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், புலியை புகழ்ந்து தள்ளி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புலி படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்ட செட்டுகள் என்னை ரசிக்க வைத்தது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தன. படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த புலி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது. விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது.”

“ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்த படம் இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லிங்காக (விறுவிறுப்பாக) இருந்தது. குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம் குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் புலி. ‘ஹேட்ஸ் ஆப் டு த புலி டீம்’ (Hats Off to the Puli Team)” என்று அவர் தெரிவித்துள்ளார்.