Home உலகம் மார்க் சக்கர்பெர்க்கின் குழந்தைக்கு பெயர் வைக்க மறுத்த சீன அதிபர்!   

மார்க் சக்கர்பெர்க்கின் குழந்தைக்கு பெயர் வைக்க மறுத்த சீன அதிபர்!   

669
0
SHARE
Ad

markநியூ யார்க் – எத்தகைய மனக் கிளர்ச்சிகளிலும் சிக்கி விடக் கூடாது என்பதில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் உறுதியாக இருப்பார் போல் தெரிகிறது. பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனக்கு விரைவில் பிறக்க இருக்கும் பெண் குழந்தைக்கு, சீன மொழியில் பெயர் வைக்குமாறு ஜிங்பிங்கிடம் சமீபத்தில் வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஆனால், கண்டிப்பாக முடியாது என்று ஜிங்பிங் கூறிவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

mark2இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது போல், சீன அதிபரும் சமீபத்தில் அங்கு சென்றிருந்தார். அப்போது நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட மார்க் சக்கர்பெர்க், ஜிங்பிங்கை சந்தித்து தனது மனைவியின் வயிற்றில் வளரும் பெண் குழந்தைக்கு, சீன மொழியில் ஒரு நல்ல பெயரை தேர்வு செய்து தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். எனினும், சீன அதிபர் அதற்கு ‘இது ஒரு மாபெரும் பொறுப்பு’ என்று கூறி கண்டிப்பாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், சீனாவில் பேஸ்புக்கை எப்படியேனும் நுழைத்து விடவேண்டும் என மார்க் எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.