Home Featured இந்தியா இந்தியாவைப் படமெடுங்கள் – அழைக்கிறது கூகுள்!

இந்தியாவைப் படமெடுங்கள் – அழைக்கிறது கூகுள்!

688
0
SHARE
Ad

googleபுது டெல்லி – இந்தியா மற்றும் அதன் கலாச்சாரத்தை மேலும் அறிந்து கொள்வதற்கு கூகுள் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. இந்த முயற்சியில் இந்திய மண்ணின் மைந்தர்களையும் பங்கேற்க அழைத்துள்ளது.

ஒரு நாள் முழுவதும் இந்தியாவில் நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி அதனை கேமராவில் படம் பிடித்து கூகுளுக்கு அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் சிறந்த படங்களுக்கு சிறப்பான அங்கீகாரத்தை அளிக்க கூகுள் முடிவு செய்துள்ளது.

கூகுளின் இந்த முயற்சிக்கு புகழ்பெற்ற இயக்குனர்களான ரிட்லி ஸ்காட், அனுராக் காஷ்யப் மற்றும் ஒளிப்பதிவாளர் பால்கி ஆகியோர் துணை நிற்கின்றனர்.

#TamilSchoolmychoice

‘இண்டியா இன் எ டே’ (India in a Day) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர், ஒரு நாளில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை படமாக எடுத்து கூகுள் நிறுவனத்திற்கு இம்மாதம் 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதில் கலந்து கொள்ளும் அனைவரின் பங்களிப்பிலும் உருவாகவிருக்கும் ‘இண்டியா இன் எ டே’ திரைப்படம், இந்திய மக்களின் ஒட்டுமொத்த கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது. .

மேலும் இது தொடர்பான அனைத்து விவரங்களும் http://indiainaday.withgoogle.com என்ற தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.