நஜிப் சார்பில் இந்தக் கடிதத்தை அவரது வழக்கறிஞர் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. தான் கூறிய கருத்து தொடர்பில் டாக்டர் லிங் மன்னிப்பு கோர வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு மன்னிப்பு கோராத பட்சத்தில் அவர் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
டாக்டர் லிங்கின் கருத்துக்கள் பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும், பொது மக்கள் மத்தியில் அவரது நன்மதிப்பை குறைக்கும் வகையில் உள்ளது எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.