யாங்கூன் – மலேசியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான மலாயன் வங்கி (சுருக்கமாக மேபேங்க்) நேற்று முதல் மியன்மாரின் தலைநகர் யாங்கூனில் அதிகாரபூர்வமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.
வழக்கமான வங்கி நடவடிக்கைகள், நிறுவனங்களுக்கான கடன் வசதிகள் வழங்குதல், பண பரிமாற்றங்கள் போன்ற சேவைகளில் இந்தக் கிளை இனி ஈடுபடத் தொடங்கும்.
75 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாகக் கொண்டு இந்தக் கிளை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மேபேங்க் வங்கி மியன்மாரில் செயல்பட்டு வந்திருந்தாலும், முழுமையான வங்கி சேவைகளுடன் தற்போது இயங்கத் தொடங்கியுள்ளது.
மியன்மார் நாட்டின் மீதான வணிகத் தடைகள் கட்டம் கட்டமாக இரத்து செய்யப்பட்டு வருவதால் மியான்மார் நாட்டின் வணிகம் அதிகரிக்கத் தொடங்கும் என்றும், அதற்கான ஊடகமாக மேபேங்க் வங்கி திகழும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.