Home Featured நாடு ஓராங் அஸ்லி குழந்தைகள் மாயமான இடத்தில் சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

ஓராங் அஸ்லி குழந்தைகள் மாயமான இடத்தில் சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

586
0
SHARE
Ad

orang asli kidsகுவா மூசாங் – 7 ஓராங் அஸ்லி (பழங்குடியினர்) குழந்தைகள் மாயமாகி 6 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர்கள் படித்த பள்ளியில் இருந்து 500 மீட்டர் தொலைவிலுள்ள சுங்கை பெரியாஸ் என்ற இடத்தில் அழுகிய நிலையில் இளம் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் அச்சடலத்தை தேடுதல் குழுவினிரிடம் ஒப்படைத்துள்ளதாக அம்மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் சைபுல் பாஹ்ரி அப்துல்லா கூறியுள்ளார்.

எனினும், அந்த சடலம் மாயமான 7 குழந்தைகளில் ஒருவரின் சடலமா? என்பதை சைபுல் உறுதிப்படுத்தவில்லை.

#TamilSchoolmychoice