Home இந்தியா சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்தி கவிஞரும் சாகித்ய அகாடமியை கைவிட்டார்!

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்தி கவிஞரும் சாகித்ய அகாடமியை கைவிட்டார்!

540
0
SHARE
Ad

ashokபுது டெல்லி – இந்தியாவில் மதவாதிகளின் செயல்பாடுகள் நாட்டின் பன்முகக் கலாச்சாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இதனை பிரதமர் மோடியும் கண்டும் காணாதது போல் இருக்கிறார் என்று கூறி தனக்கு அளிக்கப்பட்ட இந்தியாவின் உயரிய விருதுகளுள் ஒன்றான சாகித்ய அகாடமி விருதை பிரபல எழுத்தாளரும், ஜவஹர்லால் நேருவின் உறவினருமான நயன்தாரா சேகல் நேற்று முன்தினம் திருப்பிக் கொடுத்தார்.

இந்நிலையில் மற்றொரு பிரபல இந்திக் கவிஞரான அசோக் வாஜ்பேயியும் அதே கருத்தினை வலியுறுத்தி தனது சாகித்ய அகாடமி விருதை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.

“நாட்டில் எழுத்தாளர்களுக்கும், சிறுபான்மை சமூகத்தினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே இவ்விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்க எழுத்தாளர்களுக்கு இதுவே சரியான தருணம். நாவன்மை படைத்த மோடி ஏன் நாட்டின் பன்முகத் தன்மை பாதுகாக்கப்படும் என்று இதுவரை ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை.”

#TamilSchoolmychoice

“அவரது அமைச்சரவை சகாக்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அவர் இன்னமும் மௌனம் சாதித்து வருகிறார். ஏன் அவர்கள் வாயை அவர் அடைக்கவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.