Home Featured நாடு காஜாங்கில் கடத்தப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்!

காஜாங்கில் கடத்தப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்!

800
0
SHARE
Ad

Kajang 1காஜாங் – காஜாங்கில் சுங்கைச் சுவா பசார் என்ற இடத்தில் இன்று காலை 9.30 அளவில் வழி கேட்பது போல் நடித்து, 5 வயது சிறுவனை பெற்றோரிடமிருந்து மர்ம நபர்கள் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அச்சிறுவனை இன்று மாலை 5.30 மணியளவில், டேக்சி ஓட்டுநர் ஒருவர், தாமான் சஹாயாவிலுள்ள அச்சிறுவனின் வீட்டில் ஒப்படைத்துள்ளார்.

அச்சிறுவனைக் கண்ட பெற்றோர் ஓடிச் சென்று கண்ணீருடன் அவனை கட்டியணைத்துக் கொண்டதாக ‘த ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice