Home Featured நாடு அலியாஸ் கொலை: திரெங்கானுவில் கடந்த 3 மாதங்களில் இது 3 வது துப்பாக்கிச்சூடு!

அலியாஸ் கொலை: திரெங்கானுவில் கடந்த 3 மாதங்களில் இது 3 வது துப்பாக்கிச்சூடு!

526
0
SHARE
Ad

20151010_Alias-Abdullah_thestar_0கோல திரெங்கானு- அலோர் லிம்பாட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அலியாஸ் அப்துல்லா (படம்) நேற்று அவரது வீட்டின் முன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். திரெங்கானு மாநிலத்தில் கடந்த 3 மாதங்களில் நடக்கும் மூன்றாவது கொலை சம்பவம் இது என்று கூறப்படுகின்றது.

நேற்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனை முடிவடைந்த நிலையில், மாராங்கில் உள்ள அவரது கம்போங் அலோர் லிம்பாட் வீட்டில் இருந்த அலியாசை மோட்டாரில் வந்த இரு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் அவரது கன்னத்தில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து இறந்துள்ளார்.

#TamilSchoolmychoice

சுட்டுக் கொல்லப்பட்ட அலியாஸ் அப்துல்லாவுக்கு 51 வயது ஆகிறது. அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது காவல்துறையால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.