கோலாலம்பூர் – நேற்று காஜாங் சுங்கை சுவா பசாரில் நடந்த 5 வயது சிறுவன் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
சுங்கை சுவாவில் நேற்று இரவு 10.25 மணியளவில் நடந்த சோதனையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் சமாஹ் மட் தெரிவித்துள்ளார்.
எனினும், சிறுவனைக் கடத்தியது அவர்கள் தானா? என்பது விசாரணைக்குப் பின்பு தான் உறுதியாகத் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் போதை மருந்து பயன்படுத்தியிருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை 5.30 அச்சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்த டேக்சி ஓட்டுநர் நிசாம் கூறுகையில், “சாலையில் அச்சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தான். வாட்சாப்பில் பரவிய தகவலை வைத்து அச்சிறுவனை அடையாளம் கண்டு கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
சிறுவனை அடையாளம் கண்டுகொண்ட அவர், அவனை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் நேராக அச்சிறுவனின் வீட்டில் கொண்டு போய் விட்டது எப்படி? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.