Home Featured கலையுலகம் நடிகர் சங்க ஊழல் ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் விஷால்!

நடிகர் சங்க ஊழல் ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் விஷால்!

538
0
SHARE
Ad

mdu vishal01மதுரை – விஷால் மீது நடிகர் சரத்குமார் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இன்று மதுரையில் சரத்குமார் மீதான ஊழல் ஆதாரங்களை அம்பலப்படுத்தி விஷால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

நாடக நடிகர்களின்  வாக்குகளை பெறுவதற்கு விஷால் அணியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதுதொடர்பாக இன்று மதுரை வந்த அவர்கள், அங்கு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, நடிகர் சங்க கட்டிட விவகாரத்தில் சரத்குமாருக்கு எதிராக நீதிமன்றம் அளித்த உத்தரவையும், நடிகர் சங்கம் ஐந்து வருடங்களாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டாதற்கு வருமான வரித்துறை அனுப்பிய உத்தரவையும் பத்திரிக்கையாளர்கள் முன்பு வெளியிட்டார்.

mdu vishal02அதன் பின்பு அவர் அளித்த பேட்டியில், “நான் படித்தவன், ஆதாரமில்லாமல் எதையும் சொல்ல மாட்டேன், சரத்தின் இமேஜை (கௌரவத்தை) கெடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் சங்க கட்டிடத்தை வணிகர் சங்கத்திற்கு குத்தகைக்கு விட வேண்டும் என்ற முடிவு எடுத்தனர்.”

#TamilSchoolmychoice

“அப்போது, இதுகுறித்து அனைத்து நடிகர் சங்க நிர்வாகிகளையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர். மேலும், தற்போதுள்ள கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டி, நாமே வணிக வளாகம் நடத்தலாம் என்றும் அவர்கள் கூறினர்.”

mdu vishal03“ஆனால், அதை ஏற்காமல் சரத்குமாரும், ராதாரவியும் அவசரமாக தனியாருடன் குத்தகைக்கு ஒப்பந்தம் போட்டனர். இதில் பல்வேறு முறைகேடு நடந்ததோடு, பணமும் பெரிய அளவில் கைமாறப்பட்டிருக்கிறது. இதையடுத்துதான், அந்த கட்டிடம் வேகமாக இடிக்கப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர், அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டார்.

விஷாலின் இந்த அதிரடி நடவடிக்கையால் சரத்குமார் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.